காவேரி பற்றி அறிவோம்
காவேரியைப் பற்றி அறிவோம்
முகவரை:
சோழநாட்டில் பிறந்து வளர்ந்து தற்போது பல்லவபுரத்தில் வாழும் சோழ வம்சத்தின் குழந்தையாய்,உழவனின் மகனாய்,களப் பணியாளனாய்,போராளியாய் எம் தாய்(காவேரித் தாயை)காண்போம் இக்கட்டுரையில்..!
“உலகம் அழியும் காலம் வந்தாலும்
சோழ வளநாட்டைத் தன் குழந்தையாய்
வளர்க்கும் அரும்பணியைக்
காவேரித்தாய் நிறுத்திக் கொள்ளமாட்டாள்”
~இளங்கோவடிகள்
என்ற கூற்றைப் போல பல கவிஞர்கள் காவேரியை போற்றிக் கூறியுள்ளனர்
காவேரியின் வரலாறும் ,தோன்றமும்:
இந்தியத் தீபகற்பத்தின் தென் பகுதியில் அமைந்துள்ளது. குடகு மாவட்டத்தைச் சேர்ந்த தலைக்காவேரி என்ற இடத்தில் 4400 அடி (கடலின் நீர்மட்டத்தை விட)உயரத்தில் தோன்றுகிறது.
பெயர் வரக் காரணம்:
காவிரி ஆறு தான் செல்லுமிடமெல்லாம் பூங்காக்களை விரித்துச் செல்லுவதால் காவிரி எனப் பெயர் பெற்றது
சோழனின் பசுஞ்சோலை:
காவேரிப் பாயும் இடமெல்லாம் அப்போழுது நம் சோழன் ஆண்டுவந்ததால் அப்பகுதிகள் உழவுப் பசுஞ்சோலையாய் ‘சோழனின் காடு’ காட்சி அளித்தது .அதைப் பார்த்த சோழர்கள் அதை நினைவூட்டலால் காவேரியின் கரையில் காவேரியம்மன் கோவிலை கட்டினான்
தமிழகத்தில் நதிகளின் பெயர்கள் பெண்பால் பெயர்களாக இருக்கின்றன. அவை காரணப் பெயர்களும் கூட. காவிரிக்கு ‘பொன்படு நெடுவரை' அதையெ பின்பு ‘பொன்னி’ என்று பெயர் வந்ததற்கு அதன் நீரில் அடங்கியிருந்த தாதுக்களில் தங்கத் தாது அதிக அளவில் இருந்திருக்கிறது.
காவேரியை தாரை வார்த்தது
மன்னர்களின் ஆட்சிக் காலம் கொஞ்சம் கொஞ்சமாய் மாண்டப் போது கிழக்கிந்திய கம்பெனிக் காரன் இந்தியாவில் படையெடுத்தக் காலத்தில் , அந்தப் பகுதியையும் கைப்பற்றி குடகு
பகுதியை கூர் மாகாணம் பிரித்து அதன் தலைநகராமாய்
மடிக்கட்டு(மிகாறா) என வசப்படுத்தி 1834 முழுவதும் தன் வசப்
படுத்தினான்
இந்தியா விடுதலை அடைந்த பின்பு,சமஸ்தானங்கள் பிரிக்கப் பட்டு ஒரு மித்த இந்தியாவாக உருவானதுஅப்போது அனைத்து மாநிலங்களும் இனம் மற்றும் மொழி வாரி பிரிக்க வேண்டும் என்று 1946 ல் அவசர சூழ்நிலை வலுத்து வந்தது
அதனால் குடகு பகுதி மக்கள் அவர்களை யூனியன் பிரதேசமாய் கூறவேண்டும் என்று கூறினர்.ஆனால் அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த இந்திய தேசிய காங்கிரஸின் பிரதமர்.திரு.நேரு நீங்கள் மதராஸப் பட்டினத்தோடா இல்லை கர்நாடகாவொடோ இணைந்துக் கொள்ளுங்கள் என்று ஆலோசனை கூறினார்
எனவே குடகு பகுதி மக்கள் தம் மொழி மற்றும் கலாச்சாராத்தால் தமிழினத்தோடுத் தான் இணைய விரும்பினர் ஆனால் அப்போது மதராஸப் பட்டினத்தில் ஆட்சியில் இருந்த தலைவர்கள்
இந்திய தேசிய காங்கிரஸின்(ஒமந்தூர் ராமசாமி ரெட்டி,P.S.குமாரசாமி ராஜா,C.ராஜாகோபாலச்சாரியார்) அதை பற்றி சிந்திக்கவும் கண்டுக்கொள்ளவும் இல்லை அதன் பின்பு காவேரி அவர்கள் வசமானது
காவேரியின் எல்லை:
இதன் நீளம் 800 கிமீ.
கர்நாடகாவில் 316 கிமீ ,தமிழ்நாட்டில் 420 கிமீ இடைப்பட்ட தொலைவில் 64 கிமீ கொண்டது
கர்நாடகத்தில் (குடகு,ஹாசன்,மைசூர்,மாண்டியா,பெங்களூர்,ரூரல், சாம்ராஜ் நகர் )மாவட்டங்கள் வழியாவும்
தமிழ்நாட்டில்
(தர்மபுரி,சேலம் ,ஈரோடு,நாமக்கல்,கரூர்,தஞ்சாவூர்,திருவாரூர்,நாகப்பட்டினம்)
மாவட்டங்கள் வழியாகச் சென்று பூம்புகார்
என்னும் இடத்தில் வங்காளவிரிகுடாக் கடலில் கலக்கிறது.
தலைக்காவேரி முதல் பூம்புகார் வரை அதல் வரைவோலம்
காவேரியின் பங்கு:
காவிரி நீரானது பாசனத்திற்காகவும், மக்களின்
அன்றாடத்தேவைகளுக்காகவும் நீர் மின்உற்பத்திக்காகவும் முதன்மையாகப் பயன்படுத்தப்படுகிறது.
காவிரியின் குறுக்கே பல அணைகளும் குடிநீர் நீரேற்று நிலையங்களும் தடுப்பணைகளும் நீர்மின்நிலையங்களும்
கட்டப்பட்டுள்ளன.
காவிரி ஆற்றின் சிவனசமுத்திர அருவியின் இடது பக்கம் 1902-இல் அமைக்கப்பட்ட நீர்மின்நிலையமே ஆசியாவின் முதல் நீர்மின்நிலையம் ஆகும்.
காவேரியின் உபநதிகள்:
கபினி,ஹேமாவதி,ஹார்ங்கி,லட்மண தீர்த்தம்,ஆர்க்காவதி,சிம்சா,சொர்ணவதி,ஆகியவை கர்நாடக பகுதியில் பாயும் துணை ஆறுகள். பவானி,அமராவதி,நொய்யல். ஆகியன தமிழகப் பகுதியில் பாயும் துணை ஆறுகள் ஆகும்
காவேரியின் தீவுகள்:
கர்நாடக மாநிலத்தில் ஶ்ர்ங்கப்பட்டினம் மற்றும் சிவசமுத்திரம் ஆகிய இரு தீவுகளையும் தமிழகத்தில் ஶ்ரங்கம்
(திருவரங்கம்) தீவையும் காவிரி ஆறு கொண்டுள்ளது. இந்த
மூன்றில் ஶ்ர்ங்கப்பட்டினம் தீவானது மிகப்பெரியது, இது திப்புச் சுல்தானின் தலைநகராக விளங்கியது
காவேரியின் பெருமை அறிந்தவர்:
கர்நாடகாவும் காவிரியைப் பற்றி சிந்திக்கவும் இல்லை.ஏனெனில் அவர்கள் கோலார் தங்க வயல் பகுதியை தக்கவைக்கவே விரும்பினர்
இறுதியாக மோட்சக்குண்டம் திரு.விஸ்வேஸ்வரய்யா எனபவரால் ஆய்வு மேற்கொண்டு அவரின் வழிகாட்டிதலின் படியே குடகு பகுதியை 1956 ஆம் ஆண்டில் கர்நாடகா தன் வசப் படுத்தி அதன் உரிமையும் அவர்களுக்கு என்றானது
காவேரியின் உரிமையில் இரு மாநிலங்களும்:
கர்நாடகத்தில் காவிரியின் போக்கு:
குடகு மாவட்டத்திலுள்ள பிரம்மகிரி மலைப்பகுதியில் தலைக்காவேரி என்ற இடத்தில் காவிரி உற்பத்தியாகிறது.ஹாரங்கி
ஆறானது குடகு மாவட்டத்தில் காவிரியுடன் இணைந்து மாண்டியா மாவட்டத்திலுள்ள கிருஷ்ணராஜ சாகர் என்ற மன்னன அவன் பேரிலே 1938 ஆம் ஆண்டு நீர்த்தேக்கம் கட்டினான்.
ஆறானது குடகு மாவட்டத்தில் காவிரியுடன் இணைந்து மாண்டியா மாவட்டத்திலுள்ள கிருஷ்ணராஜ சாகர் என்ற மன்னன அவன் பேரிலே 1938 ஆம் ஆண்டு நீர்த்தேக்கம் கட்டினான்.
கிருஷ்ணராஜ சாகர் நீர்த்தேக்கம் மைசூருக்கு அருகில் உள்ளது.
ஹேமாவதி, லட்சுமண தீர்த்தம் ஆகிய 2 ஆறுகளும் கிருஷ்ணராஜ சாகர் நீர்த்தேக்கத்தில் காவிரியுடன் இணைகின்றன. கிருஷ்ணராஜ சாகர் நீர்த்தேக்கத்திலிருந்து வெளிவரும் காவிரி ஸ்ரீரங்கப்பட்டணம்
ஹேமாவதி, லட்சுமண தீர்த்தம் ஆகிய 2 ஆறுகளும் கிருஷ்ணராஜ சாகர் நீர்த்தேக்கத்தில் காவிரியுடன் இணைகின்றன. கிருஷ்ணராஜ சாகர் நீர்த்தேக்கத்திலிருந்து வெளிவரும் காவிரி ஸ்ரீரங்கப்பட்டணம்
தீவை உண்டாக்குகிறது. பின்பு கபினி, சொர்ணவதி ஆகிய ஆறுகள் காவிரியுடன் இணைந்து கொள்கின்றன. பின் காவிரி சிவசமுத்திரம் தீவை உண்டாக்குகிறது. இங்கு இரு பிரிவுகளாக பிரியும் காவிரி ஒரு புறம் ககனசுக்கி அருவியாகவும் மறுபுறம் பாறசுக்கி அருவியாகவும் விழுகிறது. வலப்புறம் அமைந்த ககனசுக்கி அருவியில் 1902 இல் ஆசியாவின் முதல் நீர் மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டு கோலார் தங்க வயலுக்கு மின்சாரம்
வழங்கப்பட்டது.
வழங்கப்பட்டது.
பின் காவிரியுடன் சிம்சா மற்றும் அர்க்கவதி ஆறுகள் இணைகின்றன. அர்க்கவதி ஆறு இணைந்தவுடன் காவிரியானது ஆழமான குறுகிய பாறைகளின் வழியாக பாய்ந்து தமிழகத்தை அடைகிறது. ஆடு கூட இங்கு காவிரியைத் தாண்டிவிடலாம் என்பதால் இவ்விடத்திற்கு மேகேதட்டு என்று பெயர், இதைஆடு
தாண்டும் காவிரி என்று அழைப்பர்.
தாண்டும் காவிரி என்று அழைப்பர்.
அதன் பின்பு அந்த அரசாங்கம்
1974 ல் கபினி அணையையும்,
1979 ல் ஹேமாவதி அணையையும்,
1982 ல் ஹாரங்கி அணையையும் கட்டி காவேரியின் தண்ணீரையும் ,அவ்வரசின் குறைந்த நிலப்பரப்பையும் செம்மையாக்கியது
தமிழ்நாட்டில் காவேரியின் பங்கு:
மிக குறுகிய அகலமுடைய ஆடு தாண்டும் காவிரியிலிருந்து தமிழகம் வரும் காவிரியானது பிலிகுண்டுலு வழியாக ஓகேனக்கல் அருவியை அடைகிறது. பின் காவிரியானது ஆங்கிலேயனால் 1934ல் மேட்டூரில் லெப்டினன்ட் கேணல் சர் ஜார்ஜ் ஃப்ரெட்ரிக் ஸ்டான்லி ஜி.சி.ஐ.எஸ். ஜி.எம்.ஐ.எம்.எம்.ஜி. என்ற பொறியாளானால் கட்டப்பட்டு அவனது பேரிலே(Stanly Reservoir) என்று வைத்து அதன் நீரானது மேட்டூர் அணையை அடைந்து ஸ்டான்லி நீர்த்தேக்கத்தை உருவாக்குகிறது. இங்கிருந்தே தமிழக காவிரி பாசனம் தொடங்குகிறது. மேட்டூரிலிருந்து வெளிவரும் காவிரியுடன் பவானி என்னுமிடத்தில் பவானி ஆறு கலக்கிறது. ஈரோடு நகரை கடந்து செல்லும் காவிரியுடன் கொடுமுடி அருகேயுள்ள நொய்யல் என்னுமிடத்தில் நொய்யல் ஆறில் கலக்கிறது. அமராவதி ஆறானது கரூர் அருகேயுள்ள கட்டளை என்னுமிடத்தில் காவிரியுடன் கலக்கிறது. கரூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் பாயும் காவிரி அகண்டு காணப்படுவதால் அங்கு பாயும் காவிரியை அகண்ட காவிரி என்பர். முசிறி, குளித்தலை நகரங்களை தாண்டிச்செல்லும் காவிரி
முக்கொம்பு என்னும் இடத்தல் மேலணையை அடைகிறது. இந்த அணையை 1836 ல் சர் ஆர்தர்க்ங் என்பவரால் கிழ்க்கிந்திய கம்பெனி முலம் கட்டப்பட்டது..இங்கு காவிரி இரண்டு கிளைகளாக
முக்கொம்பு என்னும் இடத்தல் மேலணையை அடைகிறது. இந்த அணையை 1836 ல் சர் ஆர்தர்க்ங் என்பவரால் கிழ்க்கிந்திய கம்பெனி முலம் கட்டப்பட்டது..இங்கு காவிரி இரண்டு கிளைகளாக
பிரிகிறது. ஒரு கிளைக்கு கொள்ளிடம் என்றும் மற்றொன்றுக்கு
காவிரி என்றும் பெயர். வெள்ள காலத்தில் பெருகி வரும் நீரானது கொள்ளிடத்தில் திருப்பி விடப்பட்டு காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்படுகிறது.கொள்ளிடம் காவிரியின் வெள்ள வடிகாலாக இருப்பதால் பெரும்பாலும் வறண்டே காணப்படும். கொள்ளிடம்

மற்றும் காவிரிக்கு நடுவில் திருச்சிக்கு அருகே (திருவரங்கம்) தீவை உருவாக்கிய பின் காவிரியானது கல்லணையை அடைகிறது. இந்த கல்லணையானது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாம் இராஜராஜ சோழனால் கட்டப்பட்டதுகல்லணையிலிருந்து செல்லும் காவிரி பல சிறு கிளைகளாக பிரிந்து தமிழகத்தின்
நெற்களஞ்சியமான காவிரி டெல்டாவை உருவாக்கி வங்கக்கடலில் கலக்கிறது. காவிரி டெல்டாவில் அரசலாறு, வெண்ணாறு, வெட்டாறு, புதுஆறு, மன்னியாறு ஆகிய பெயர்களால் காவிரியின் சில கிளைகள் அழைக்கப்படுகின்றன. தமிழகத்தின் தஞ்சாவூர்,திருவாருர்,நாகப்பட்டிணம் மாவட்டங்கள், புதுச்சேரியின் காரைக்கால் பகுதி ஆகியவை காவிரி டெல்டாவை சேர்ந்தவை.

காவேரியின் தீர்வும் ,அதன் பங்கீடும்:
காவிரி பிரச்சனை......!
மன்னர்கள் ஆண்டப் பொழுது
(கி.பி.1100 முதல் கி.பி.1800 ஆண்டுவரை)
கி.பி.1202 ம் நூற்றாண்டில் தமிழகத்தை ஆண்ட கரிகால சோழன் காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதைத் தடுக்க காவிரியில் ஒரு பெரிய அணையைக் கட்ட முடிவெடுத்தான். இந்த அணை கரிகாலன் என்ற சோழ மன்னனால் 2 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.தற்போதுள்ள அணைகளில் கல்லணையே மிக பழமையானது எனவும், தற்போதும் புழக்கத்தில் உள்ளது எனவும் அறியப்படுகிறது.
இதுவே உலகின் மிகப்பழமையான நீர்ப்பாசனத் திட்டம் என்றும் கூறப்படுகிறது. மணலில் அடித்தளம் அமைத்து கல்லணையைக் கட்டிய பழந்தமிழர் தொழில்நுட்பம் இன்று வரை வியத்தகு சாதனையாகப் புகழப்படுகிறது.
கல்லணையின் நீளம் 1080 அடி அகலம் 66 அடி உயரம் 18 அடி. இது நெளிந்து வளைந்த அமைப்புடன் காணப்படுகிறது.ஒரு நொடிக்கு இரண்டு லட்சம் கனநீர் பாயும் காவிரியின் தண்ணீர் மேல் அணைக்கட்டுவதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள் தமிழர்கள்.
காவிரி ஆற்றின் மீது பெரிய பாறைகளைக் கொண்டுவந்து போட்டனர். அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் சென்றன. அதன் மேல் வேறொரு பாறையை வைத்து நடுவே தண்ணீரில் கரையாத
ஒருவித ஒட்டும் களி மண்ணைப் புதிய பாறைகளில் பூசி இரண்டையும் ஒட்டிக்கொள்ளும் விதமாகச் செய்தனர். இதுவே இவ்வணையினைக் கட்டப் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பம்
ஒருவித ஒட்டும் களி மண்ணைப் புதிய பாறைகளில் பூசி இரண்டையும் ஒட்டிக்கொள்ளும் விதமாகச் செய்தனர். இதுவே இவ்வணையினைக் கட்டப் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பம்
கல்லும் களிமண்ணும் மட்டுமே சேர்ந்த ஓர்
அமைப்பு 1900 ஆண்டுகளுக்கு மேலாக காவிரி வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தி வருவது அதிசயமே ஆகும். 1839 இல் அணையின் மீது பாலம் ஒன்று கட்டப்பட்டது. பல இடங்களிலிருந்து தினந்தோறும் ஏராளமானோர் இவ்வணையைக் காண வருவதால், இது ஒரு சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது.(பல நூற்றாண்டுகளை கடந்தும் உறுதியோடு நிற்கும் கல்லணை தமிழர்களின் கட்டுமான திறனை பறை சாற்றி கொண்டிருக்கிறது. பழைமையான இந்த அணையை கட்டிய கரிகால சோழனை கெளரவிக்க கல்லணையில் இருந்து திருக்காட்டுப்பள்ளி
சாலையில் காவிரி ஆற்றின் இடது கரை ஓரத்தில் மணி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தில் யானை மீது கரிகால சோழன் அமர்ந்த நிலையில் சிலை வெண்கலச் சிலை அமைக்கப்பட்டு உள்ளது)

கி.பி 1141ஆம் ஆண்டு முதலாம் நரசிம்மன் என்ற மன்னன் மைசூரை ஆண்டுவந்தான்.அவன் தான் முதன்முதலில் காவேரியை சோழநாட்டிற்கு வராமல் தடுத்து முற்பட ஆரம்பித்தான்.
அப்போது இரண்டாம் இராஜராஜ சோழனால் படைக் கொண்டு போர்த்தொடுத்து காவேரியை மீட்டான்.அதன் பின்பு மைசூரை ஆண்ட மன்னர்கள் சோழனைப் பார்த்து அஞ்சி தடுக்கவில்லை
பொறியியல் ஆய்வு:
முதல் முறையாக இந்த ஆய்வறிக்கை தில்லி இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT Delhi) மேற்கொண்ட பண்டைய நூல்கள் மற்றும் கல்வெட்டுகளின் விரிவான பொறியியல் ஆய்வு மற்றும் ஆய்வுகூடத்தில் உருவகப்படுத்துதல் பற்றி தெரிவித்துள்ளது. காப்பகத் தேடல், கள ஆய்வுகள், நேரடி நில அளவை மற்றும் நீரோட்டம் பற்றிய தரவுகள் அடிப்படையில் இந்த ஆய்வு செய்யப்பட்டது. விநோதமான வடிவத்தில் கட்டப்பட்ட இந்தக் கல்லணை வண்டல் மண் அணையில் படிந்து விடாமல் கிளை ஆறான கொள்ளிடத்தில் நீரோட்டத்தில் அடித்துக்கொண்டு ஓடுவது அதிகரிக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது என்று ஒரு வாதம்
முன்வைக்கப்படுகிறது.
முன்வைக்கப்படுகிறது.
இப்பகுதியில் பாசனத்துக்கு முதன்மையான ஆறு காவிரி. கி.பி.1800-லேயே 6 லட்சம் ஏக்கர்களுக்கு பாசனம் செய்து கொண்டிருந்தது. சாதாரண காலங்களில் காவிரி நீரை ஆழமாகவும் வேகமாகவும் ஓடும் கொள்ளிடத்தில் இருந்து தடுத்து வைப்பதுதான் கல்லணையின் முக்கிய செயல்பாடு. ஆனால் வெள்ளம் வந்தால் அதைப் பாதுகாப்பாக காவிரியில் இருந்து கொள்ளிடத்தில் திருப்பி கடலில் கொண்டு சேர்க்க வழி செய்வதுவும்தான். அதன் அருகே வேறு எந்தக் கட்டமைப்பின் உதவியும் இல்லாமல் கல்லணை இந்த செயல்பாட்டை சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளாகச் செய்து கொண்டிருந்தது.
ஆங்கிலேயப் பொறியாளர்கள் மூலத்திட்டத்தை முழுமையாகப்
புரிந்து கொள்ளாமல் பல மாற்றங்களை மேற்கொண்டனர். பல தசாப்தங்களாக வண்டல் மண் பிரச்சினையுடன் போராடினர். ஒரு ஆங்கிலேயப் பொறியாளர் எழுதுகிறார் (Baird Smith, 1856); "கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் வண்டல் மண்ணுடன் ஒரு

இடைவிடாத போராட்டம் இருந்தது. ஆற்றின் பல பகுதிகளில் இருந்து ஆட்களை வைத்து தூர் வாரப்பட்டது. அதிக செலவில் நீண்ட கரைகள் கட்டப்பட்டன. எனினும் எல்லா முயற்சிகளும், பலனற்றுப் போய்விட்டன. ஆற்றின் படுகை தொடர்ந்து ஏற்றம் கண்டது."
நல்ல காலமாக மாற்றங்களுக்கு முன்பிருந்த கல்லணையை 1776-ல் செய்யப்பட்ட ஒரு பதிவில் இருந்து உய்த்துணர இயலும். இப்பதிவு அணைக்கட்டின் விசித்திரமான சிறப்பியல்புகளைக் குறிப்பிட்டுள்ளது. கல்லணை ஒரு முனையில் இருந்து மறு முனை வரை இரண்டு அல்லது மூன்று வளைவுகளுடன் காணப்பட்டது.
அதன் முகடு மட்டமாக இல்லாமல் சாய்வாக இருந்தது - கிழக்கு முனையை விட மேற்கு முனை அதிக உயரம். அது குறுக்கிலும் சாய்வாக இருந்தது - சில பகுதிகளில் இது ஓர் ஒழுங்கான மற்றும் சீரான சாய்வாக இருந்தது, மற்ற பகுதிகளில் ஒழுங்கற்ற 3 அல்லது 4 படிகள். இறுதியாக, அணை நெடுகிலும் சுமார் ¾ அங்குல கனத்துக்கு வழுவழுப்பான சுண்ணாம்புக் கலவை பூசப்பட்டிருந்தது. இந்தப் பூச்சு பெரும்பாலும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது மாற்ற வேண்டும். மேலும், முன்பக்கம் கரடுமுரடாக சமநிலையற்று இருந்தது. ஆனால் இதுவே மிக அனுகூலமாக இருந்திருக்கும் என்று கூறப்படுகிறது. ஏனெனில் இடையறாமல் வண்டல் மண் நீர்மக்குழம்பாகி அணையின் முன்பக்கச் சுவரை அரிக்காமல் பாதுகாப்பாக இருந்தது.

பிரிட்டிஷ் கம்பெனி ஆட்சி:
(கி.பி.1800 முதல் கி.பி.1900 ஆண்டு வரை):
காலம் செல்ல மன்னர் ஆட்சி மாய்ந்துப் பொழுது கிழக்கிந்திய கம்பெனி காரன் வந்தான் இந்தியாவிற்குள்
இந்த நதிகளின் நீரை பகிர்வதில் மன்னராட்சிக் காலங்களில் பெரிய அளவில் சிக்கல்கள் உருவானதில்லை. அப்படியே சிக்கல் ஏற்பட்டாலும் பாதிக்கப்படும் நாடுகளின் மன்னர்கள் போர்தொடுத்து பிரச்சனையை தீர்த்தனர்.
1807 ஆம் ஆண்டிலேயே பிரிட்டிஷ் கம்பெனி நிர்வாகத்தின் தலைமையிலான சென்னை மாகாண அரசுக்கும் மைசூர் அரசாங்கத்துக்கும் இடையே காவிரி நதிநீரை பகிர்வதில் சிக்கல் எழுந்துள்ளது.
இந்திய நீர் பாசனத்தின் தந்தை என
அறியப்படும் சர் ஆர்தர் காட்டன் என்ற ஆங்கில பொறியாளர் கல்லணையை பல ஆண்டுகாலம் ஆராய்ந்தார்.
அறியப்படும் சர் ஆர்தர் காட்டன் என்ற ஆங்கில பொறியாளர் கல்லணையை பல ஆண்டுகாலம் ஆராய்ந்தார்.
கல்லணை பலகாலம் மணல் மேடாகி நீரோட்டம் தடைப்பட்டது.
ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் தொடர்ச்சியாக வெள்ளத்தாலும் வறட்சியாலும் வளமை குன்றியது. இந்த சூழலில் 1829 இல் காவிரி பாசன பகுதி தனி பொறுப்பாளராக ஆங்கிலேய அரசால் சர் ஆர்தர் காட்டன் நியமிக்கப்பட்டார்.
ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் தொடர்ச்சியாக வெள்ளத்தாலும் வறட்சியாலும் வளமை குன்றியது. இந்த சூழலில் 1829 இல் காவிரி பாசன பகுதி தனி பொறுப்பாளராக ஆங்கிலேய அரசால் சர் ஆர்தர் காட்டன் நியமிக்கப்பட்டார்.
இவர்தான் பயனற்று இருந்த கல்லணையில்
தைரியமாக சிறு சிறு பகுதியாய் பிரித்து எடுத்து மணல் போக்கிகளை அமைத்தார். அப்போது, கல்லணைக்கு அமைக்கப்பட்ட அடித்தளத்தை ஆராய்ந்த அவர் பழந்தமிழரின் அணை கட்டும் திறனையும் பாசன மேலாண்மையையும் உலகுக்கு எடுத்துக் கூறினார். கல்லணைக்கு கிரான்ட் அணைகட் என்ற பெயரையும் சூட்டினார்.
மைசூர் அரசு அன்றைய பிரிட்டிஷ் அரசிடம் முறையிட்டதன் பேரில் 1892 ஆம் ஆண்டு இரு அரசுகளுக்கும் இடையே முதன்முதலாக ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. அந்த ஒப்பந்தப்படி, காவிரியில் புதிதாக அணை கட்டினால் அதைப்பற்றிய முழு விவரத்தையும் சென்னை மாகாண அரசுக்கு அனுப்பி ஒப்புதல்
பெற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
பெற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
பிரிட்டிஷ் கம்பெனி ஆட்சி:
(கி.பி.1900 முதல் கி.பி.1945 ஆண்டு வரை):
1910 ஆம் ஆண்டு கண்ணம்பாடி என்ற இடத்தில் 41.5 டிஎம்சி நீரைத் தேக்கும் வகையில் அணையைக் கட்ட சென்னை மாகாண அரசிடம் மைசூர் அரசு அனுமதி கேட்டது. பிரிட்டனின் நேரடி அதிகாரத்தின்கீழ் வந்த சென்னை மாகாண அரசு, கண்ணம்பாடி அணையின் கொள்ளளவு 11 டிஎம்சிக்கு மேல் போகக்கூடாது என்று நிபந்தனை விதித்தது. ஆனால், மைசூர் அரசு திட்டமிட்டபடியே, 41.5 டிஎம்சி நீரைத் தேக்கும் வகையில் அணையைக் கட்டியது. அதை பிரிட்டிஷ் அரசாங்கமே தடுக்கமுடியவில்லை.
இந்தியாவின் ஆட்சி உரிமை பிரிட்டிஷ் ராணியிடம் இருந்ததால், இந்த விவகாரத்தை விசாரித்து தீர்ப்பளிக்க கிரிஃபின் என்பவரை நடுவராக நியமித்தார். விசாரணை முடிவில் 1914 ஆம் ஆண்டு மே மாதம் கிரிஃபின் தீர்ப்பளித்தார்.
“இருதரப்பினருமே தீர்வுக்கு தயாராக இல்லை. தீர்வு காணவேண்டும் என்ற ஆர்வமும் இல்லை. சென்னை மாகாணத்தின் நலன்களைப் பாதுகாக்க வேண்டியதே அவசியம். சென்னை மாகாணத்துக்கு கொடுத்தது போக மீதமுள்ள தண்ணீர் முழுவதையும் மைசூர் பயன்படுத்திக் கொள்ளலாம்” என்று அந்த தீர்ப்பில் கூறியிருந்தார்.
கிரிஃபின் தீர்ப்பை சென்னை மாகாண அரசு ஏற்கவில்லை. மீண்டும் மேல் முறையீடு செய்தது. இரண்டு அரசுகளுக்கும் இடையே பேச்சு தொடங்கியது. அதன்முடிவில் 1924 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் புதிய ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் 50 ஆண்டுகள் வரை நடைமுறையில் இருக்கும் என்று தீர்மானிக்கப்பட்டது. ஒப்பந்த காலம் முடியும்போது சம்பந்தப்பட்ட அரசுகள் ஒப்பந்தத்தை ஆய்வு செய்ய வேண்டும் என்று அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருந்தது. அந்த ஒப்பந்தத்தை தொடர்ந்து சில துணை ஒப்பந்தங்களும் போடப்பட்டன. அவற்றின்படி, 1929
ஆம் ஆண்டு மைசூர் அரசு கிருஷ்ணசாகர் அணையையும், 1933 ஆம் ஆண்டு சென்னை மாகாண அரசு மேட்டூர் அணையையும்
ஆம் ஆண்டு மைசூர் அரசு கிருஷ்ணசாகர் அணையையும், 1933 ஆம் ஆண்டு சென்னை மாகாண அரசு மேட்டூர் அணையையும்
கட்டிக்கொள்ள வகை செய்யப்பட்டது.
அதுவரை பிரச்சனை இல்லை. ஆனால், விடுதலைக்குப் பிறகு மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்ட பிறகுதான் காவிரிப் பிரச்சனை தீவிரமடைந்தது.
இந்தியா விடுதலையானப் பிறகு:
(கி.பி.1945 முதல் கி.பி.2000 ஆண்டு வரை):
1947 ஆம் ஆண்டு விடுதலைக்குப் பிறகு, பிரிட்டிஷ்
ஆட்சி நடைபெற்ற பகுதிகளுடன் சுயேச்சையாக இயங்கிய சமஸ்தானங்களையும் இணைத்து இந்தியா உருவாக்கப்பட்டது.
ஆட்சி நடைபெற்ற பகுதிகளுடன் சுயேச்சையாக இயங்கிய சமஸ்தானங்களையும் இணைத்து இந்தியா உருவாக்கப்பட்டது.
சமஸ்தானங்கள் பிரிக்கப் பட்ட பின்பு அப்பகுதி கர்நாடகவின் வசமானது அப்போது நம்ம மதராஸ் மாகணத்தின் முதல்வர்கள்(ஓமந்தூர் ராமசாமி ரெட்டி,P.S.குமாரசாமி ராஜா,ராஜாஜி)போன்றோர் காவேரி பற்றி சிந்திக்கவில்லை
அதன் பிறகு வந்த காமராஜர் ஆட்சியில் இருந்தப் போது,மைசூரை திவான் என்பவர் மறைத்து தண்ணீரை தர மறுத்த போது
காமராஜர் ‘இராணுவ உதவியுடன் அணையை திறப்பேன்’என்றார்
அதன்பிறகுதான் நதி நீர் பகிர்வதில் ஏராளமான சிக்கல்கள் உருவாகின. இத்தகைய சிக்கல்களை தீர்ப்பதற்காகவே இந்திய அரசியல் சட்டத்தில் Section Civil ACT 262 ஆவது பிரிவு சேர்க்கப்பட்டது.
அந்த அடிப்படையில் கிருஷ்ணா நதி நீரை பகிர்வதில் ஏற்பட்ட சிக்கலைத் தீர்க்க கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு இடையே 1969 ஆம் ஆண்டு நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. அதுபோலவே, கோதாவரி, நர்மதா நதிகளின்
நீரைப் பகிர்வதற்கும் நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது.
நீரைப் பகிர்வதற்கும் நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது.
குறிப்பாக 1968 ஆம் ஆண்டுக்குப் பிறகு, அதாவது ஒப்பந்தம் கையெழுத்தாகி 50 ஆண்டுகளை நெருங்கும் நிலையில் பிரச்சனை உருவாகியது. அதிலும் தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபிறகு, காங்கிரஸ் அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்துகொள்ளத் தொடங்கியது.
1969க்குப் பிறகு அன்றைய மத்திய அரசு திமுகவின் தயவில்தான் இருந்தது. கர்நாடகா அரசுடன் பேச்சு நடத்தியதில் உடன்பாடு எட்டப்படவில்லை
கர்நாடக அரசு ஹேமாவதி அணையைக் கட்டிக் கொள்வதில் தமிழக அரசுக்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லை" என்று 6.3.1970 அன்று தமிழக பேரவையில் கருணாநிதி பேசி இருக்கிறார் என்பது வரலாறு.
இதனைத் தொடர்ந்து, காவேரி நதியின்
உபநதிகளாகிய கபினி, ஹேமாவதி, ஹாரங்கி, சொர்ணவதி ஆகியவற்றில் பல்வேறு கட்டுமானப் பணிகளை மத்திய நீர் ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமலும், மத்திய திட்டக் குழுவின் ஒப்புதல் இல்லாமலும், தன்னிச்சையாக கர்நாடகம் துவக்கியது.
கர்நாடக அரசின் இந்த அத்துமீறல்களை எல்லாம் கண்டு கொள்ளாமல் இருந்தவர்.அன்றைய மாநில அரசுகள்

இதையடுத்து, 1971 ஆம் ஆண்டு நடுவர் மன்றம் அமைக்கக் கோரி, இந்திய அரசையும், கர்நாடக அரைசயும் எதிர்வாதிகளாக குறிப்பிட்டு, தமிழக விவசாயிகள் சங்கமும் தமிழக அரசும்
உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தன.
உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தன.
4.8.1971 அன்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 131-ன் கீழ் உச்ச நீதிமன்றத்தில் காவேரி நீர் உரிமை பிரச்சனை குறித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தமிழக பேரவை மற்றும் மேலவைக்கு தெரிவிக்காமலேயே தனக்குள்ள அரசியல் நெருக்கடி காரணமாக திரும்பப் பெற்றுக் கொண்டு விட்டது நம் மாநில அரசு. வேறு ஒன்றும் இல்லை சர்க்காரியா கமிஷன் எனும் கத்தி /துப்பாக்கி தான் .
1972 ஆம் ஆண்டு திமுக 184 தொகுதிகளில் வெற்றிபெற்று அசைக்கமுடியாத பலத்துடன் இருந்தது. இது இந்திராவுக்கு பிடிக்கவில்லை. ஏனெனில், மாநிலத்துக்கு தனிக்கொடி, மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் என்று கலைஞர் பேசிவந்த நேரம். திமுகவின் பலத்தை சீர்குலைக்க எம்ஜியாரை இந்திரா அச்சுறுத்தி வந்த நேரம்.
இந்நிலையில்தான், இந்திராவிடம் கலைஞர் காவிரி சம்பந்தமாக பேசினார். ஆனால், தமிழக அரசு வழக்குத் தொடர்ந்திருக்கும் நிலையில் மற்ற மாநிலங்களை பேச அழைக்க இயலாது, வழக்கை திரும்பப்பெற்றால் பேச்சு நடத்தி தீர்வுகாண உதவுவதாக உறுதி அளித்தார்.
பிரதமராய் இருப்பவரை நம்பாமல் எப்படி அடுத்தகட்டத்துக்கு நகரமுடியும்? எனவே கலைஞர் வழக்கை வாபஸ் பெற்றார். ஆனால், இந்திரா சொன்னபடி, காவிரி உண்மை அறியும் குழுவை அமைத்தார். பின்னர் அந்த குழு கொடுத்த அறிக்கையை கர்நாடகா, தமிழகம், கேரளா ஆகிய மூன்று மாநில முதல்வர்களும் கூடி 1973 ஆம் ஆண்டு ஆய்வு செய்தனர். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள புள்ளி விவரங்கள் உண்மை என்று மூவரும் ஒப்புக்கொண்டனர்.
1974 ஆம் ஆண்டு நவம்பர் இறுதியில் மீண்டும் மூன்று மாநில முதல்வர்களும் டெல்லியில் கூடி, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் யோசனையை ஏற்றுக்கொண்டார்கள். ஆனால், அன்றைய இந்திரா அரசு அந்த அமைப்பை நிறுவவில்லை.
1924-ஆம் ஆண்டு இரண்டாவது ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த இரண்டாவது ஒப்பந்தம் 50 ஆண்டு காலம் நடைமுறையில் இருக்கும் என்றும், மறு ஒப்பந்தம் 50 ஆண்டுகளுக்கு பிறகு ஏற்படுத்திக் கொள்வது என்றும் அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, இந்த ஒப்பந்தம்
1974-ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட வேண்டும். ஆனால் இந்த ஒப்பந்தத்தை புதுப்பிக்கத் தவறியவர் மாநில முதல்வர்.கருணாநிதி. பின்னர் திமுக மீது எம்ஜியார் கொடுத்த ஊழல்புகார்கள் அடிப்படையில் சர்க்காரியா கமிஷன் அமைக்கப்பட்டது. மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி நடைபெற்ற சமயத்தில், 1976 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், கர்நாடகா அரசுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால், கர்நாடகா அரசு அந்த ஒப்பந்தத்தை
நடைமுறைப்படுத்தவில்லை.

முதல்வராக பொறுப்பேற்ற எம்ஜியார் தண்ணீர்
பற்றாக்குறை ஏற்படும்போது கர்நாடகாவிடம் பேசி தண்ணீரைப் பெறும் போக்கு நீடித்தது. காவிரியில் தண்ணீர் திறக்க முடியாத நிலை ஏற்படும்போது திமுகமீது பழிபோடும் வழக்கத்தை அவர்தான் தொடங்கி வைத்தார்.
(ஆனால், 1979 ஆம் ஆண்டு முல்லைப் பெரியார் அணையின் நீர்மட்டத்தை 152 அடியிலிருந்து 136 அடியாக குறைத்துக்கொள்ள ஒப்புதல் அளித்தார். அந்த விவகாரமே இப்போதுவரை நீடித்துக் கொண்டிருக்கிறது என்பது வேறு விஷயம்)
சுமார் 12 ஆண்டுகள், காங்கிரஸுடன் மிக நெருக்கமான உறவு வைத்திருந்த அதிமுக ஆட்சியில் 1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு காவிரி நீர்ப் பாசன விளைபொருட்கள் விவசாயிகள் நல உரிமைப் பாதுகாப்புச் சங்கத்தினர் காவிரி நடுவர்மன்றம் அமைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கைத் தொடர்ந்தனர். அந்த வழக்கில் 1986 ஆம் ஆண்டு தமிழக அரசும் தன்னையும் இணைத்துக் கொண்டது.
எம்ஜியார் இறந்தபிறகு 1989 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தது. மத்தியில் வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணி அரசு அமைந்தது. வி.பி.சிங்குடன் கலைஞருக்கு இருந்த நெருக்கத்தை பயன்படுத்தி, தமிழக அரசு தொடர்ந்திருந்த வழக்கு விசாரணையை விரைவுபடுத்தினார். இதன் விளைவாக 1990 ஆம் ஆண்டு மே மாதம் காவிரி நடுவர் மன்றம் அமைக்கும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அடுத்த மாதமே பிரதமர் வி.பி.சிங் நடுவர் மன்றத்தை அமைத்து உத்தரவிட்டார்.
காவிரி நதிநீர் பிரச்சனை குறித்து விசாரித்த நடுவர் மன்றம் ஆண்டுதோறும் தமிழகத்துக்கு 205 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என்று 1991 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25 ஆம் தேதி உத்தரவிட்டது. ஆனால், நடுவர் மன்றத்துக்கு இடைக்கால உத்தரவு வழங்கும் அதிகாரம் இல்லை என்று கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அதை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் இடைக்காலத் தீர்ப்பை உறுதிசெய்தது. அடுத்த மாதமே 1991 டிசம்பர் 10 ஆம் தேதி அந்த உத்தரவை அரசிதழில் பதிவு செய்தது. இதையடுத்து, கர்நாடகாவில் பெரிய அளவில் வன்முறை வெடித்தது.
மத்தியிலும் மாநிலத்திலும் இணக்கமான அரசு இருந்ததால், 15 ஆண்டுகள் கழிந்தாலும் ஒன்றரை ஆண்டுகளில்
நடுவர் மன்றம் அமைத்து இடைக்காலத் தீர்ப்பை பெற்று அரசிதழிலும் வெளியிடும்படி செய்ய முடிந்தது.
நடுவர் மன்றம் அமைத்து இடைக்காலத் தீர்ப்பை பெற்று அரசிதழிலும் வெளியிடும்படி செய்ய முடிந்தது.
நடுவர் மன்றம் அமைக்கப்பட்டபோது அதை பல்லில்லாத மன்றம் என்று கேலி பேசினார் ஜெயலலிதா. ஆனால், 1993 ஆம் ஆண்டு இதே நடுவர் மன்றம் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பின்படி தண்ணீரை திறக்க வேண்டும் என்று உண்ணாவிரத நாடகம் நடத்தினார் என்பது தனிக்கதை. உண்ணாவிரதம் இருந்தாரே தவிர, பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர ஒரு துரும்பையும் கிள்ளிப்போடவில்லை என்பதே உண்மை. அவர்
உண்ணாவிரதம் இருந்ததால் இரு மாநில உறவுகளிலும்
விரிசல்தான் அதிகரித்தது.
உண்ணாவிரதம் இருந்ததால் இரு மாநில உறவுகளிலும்
விரிசல்தான் அதிகரித்தது.
1996 ஆம் ஆண்டு மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு, 1996 ஆகஸ்ட் முதல், 1997 ஜனவரி வரை கர்நாடக
முதல்வர் ஜே.எச்.படேலை 5 முறை சந்தித்து பேசினார். ஆனால், அதில் சுமுகமான தீர்வு எட்டப்படவில்லை.
இந்தியா விடுதலையானப் பிறகு:
(கி.பி.2000 முதல் கி.பி.2018 ஆண்டு வரை):
காவிரி நடுவர்மன்றம் இடைக்காலத் தீர்ப்பை வழங்கிய நிலையிலும், அந்த தீர்ப்பின் அடிப்படையில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கும்படி உச்சநீதிமன்றத்தையே நாடவேண்டியிருந்தது. உச்சநீதிமன்றம் உத்தரவிட்டாலும் உரிய தண்ணீரை திறக்க கர்நாடகா அரசு மறுப்பதும் வாடிக்கையாக இருந்தது.
இந்திய பிரதமர்கள் வி பி சிங், நரசிம்மராவ் ,குஜ்ரால் ,தேவ கௌடா,வாஜ்பாய் மற்றும் மன்மோகன் சிங் ஆகியோர் அமைச்சரவையில் திமுக அமைச்சர்கள் பதவிகள் வகித்தபோது ,காவேரி பிரச்சனைக்காக சிறு துரும்பை கூட கிள்ளி போடாதவர் தான் கருணாநிதி . அப்போதே மத்திய நீர்வளத்துறையை கேட்டு பெற்றிருந்தால் இந்நேரம் கருணாநிதி காவிரி பிரச்சனை தீர்த்ததற்காக உலக புகழ் பெற்றிருப்பார்
காவிரி நடுவர் மன்றம் கடந்த 2007ம் ஆண்டு தனது இறுதித் தீர்ப்பை அறிவித்தது. ஆனால், அதை முறைப்படி அமலாக்க அதை முதலில் மத்திய அரசின் கெஜட்டில் வெளியிட வேண்டும். அதில் வெளி யிடப்பட்டுவிட்டால், அதை நிறைவேற்ற வேண்டிய கடமை கர்நாடகத்துக்கு மேலும் அதிகமாகும். ஆனால், இதை கெஜட்டில் வெளியிடாமல் இழுத்தடித்து வந்தது மத்திய காங்கிரஸ் அரசு .இதை கெஜட்டில் ஏன் வெளியிடவில்லை ? என்று மத்திய அரசை அந்த நேரம் உச்ச நீதிமன்றமே கண்டித்துள்ளது
காவிரி நடுவர் மன்றத்தின் விசாரணையை தாமதப்படுத்த கர்நாடகா அரசு பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தியது. சுமார் 16 ஆண்டுகள் விசாரணை நடத்திய நடுவர்
மன்றம் 2007 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில்தான் இறுதித் தீர்ப்பை வழங்கியது. அதன்படி தமிழகத்துக்கு 192 டிஎம்சி தண்ணீரை மாதாந்திர அடிப்படையில் திறந்துவிட வேண்டும் என்று கூறப்பட்டது. மேலும் அந்தத் தீர்ப்பில்தான், காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவையும் அமைக்க மத்திய அரசுக்கு நடுவர் மன்றம் உத்தரவிட்டது.

ஆனால், இந்த இறுதித் தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. நடுவர் மன்ற இறுதித்
தீர்ப்பை கெஜட்டில் வெளியிட வேண்டும் என்றும் தமிழக அரசு சார்பில் முறையிடப்பட்டது.
தீர்ப்பை கெஜட்டில் வெளியிட வேண்டும் என்றும் தமிழக அரசு சார்பில் முறையிடப்பட்டது.
இதற்கிடையே 2011 தேர்தலில் வெற்றிபெற்று ஜெயலலிதா மீண்டும் முதல்வரானார். 2013 ஆம் ஆண்டு நடுவர்
மன்றத்தின் இறுதித்தீர்ப்பை கெஜட்டில் பதிவுசெய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் காவிரியில் நீர் திறப்பதை மேற்பார்வையிட ஒரு குழுவை அமைக்கவும்
மன்றத்தின் இறுதித்தீர்ப்பை கெஜட்டில் பதிவுசெய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் காவிரியில் நீர் திறப்பதை மேற்பார்வையிட ஒரு குழுவை அமைக்கவும்
உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடவும், காவிரி மேற்பார்வைக் குழுவை அமைக்கவும் நடவடிக்கை எடுத்தது திமுக பங்கேற்ற காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு. திமுக ஆட்சியில் நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வெளியானது. அதை திமுக தனதென்று உரிமை கொண்டாடவில்லை.
ஆனால், காவிரியில் தண்ணீரைப் பெற முடியவில்லை. இந்நிலையில்தான் 2014 ஆம் ஆண்டு மத்தியில் மோடி தலைமையில் பாஜக அரசு அமைந்தது. அதிமுக 37 எம்.பி.களுடன் பலம் பொருந்திய கட்சியாக வந்தது. ஆனாலும், காவிரியில் தமிழக உரிமையை பெற முடியவில்லை.
ஜெயலலிதா அப்போலோவில் சிகிச்சை பெறும் சமயத்தில் அன்றைய பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய நீர்வளத்துறை அமைச்சரான உமாபாரதி முன்னிலையில் கர்நாடகா முதல்வர் சித்தராமய்யாவுடன் பேச்சு நடத்தினார். அதில் உடன்பாடு எட்டவில்லை.
அடுத்த மாதமே, 2016 அக்டோபர் 3 ஆம் தேதி, பாஜக அரசு உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தது. அதில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது. இதுதொடர்பான தீர்ப்பில் திருத்தம் வேண்டும் என்று கோரியது.
அந்த மனுவை ஏற்ற உச்சநீதிமன்றம், தமிழ்நாடு, கர்நாடாகாவில் காவிரி பாசனப்பகுதியை ஆய்வு செய்ய ஒரு தொழில்நுட்ப குழுவை அமைத்தது. அந்தக் குழுவின் அறிக்கையைப் பெற்ற உச்சநீதிமன்றம், தனது இறுதிக்கட்ட விசாரணையை தொடங்கியது.
2017 ஜூலை 11 முதல் 2017 செப்டம்பர் 20 ஆம் தேதிவரை கர்நாடகா 9 நாட்களும், கேரளா 2 நாட்களும்,
தமிழ்நாடு அரசு 13 நாட்களும், புதுச்சேரி அரசு மற்றும் மத்திய அரசு தலா 1 நாளும் வாதங்களை முன்வைத்தன. இதையடுத்து, 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 தேதி தனது தீர்ப்பை ஒத்தி வைப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்தது.

சுமார் 5 மாதங்கள் கழித்தி தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்றம் காவிரி நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பில் வழங்கிய 192 டிஎம்சி தண்ணீர் அளவிலும் 14.75 டிஎம்சி யை குறைத்து உத்தரவிட்டது. அத்துடன் இறுதி தீர்ப்பை செயல்படுத்துவதற்கு ஒரு
திட்டத்தை 6 வாரங்களுக்குள் மத்திய அரசு அமைக்க வேண்டும் என்றும் கூறியது.
திட்டத்தை 6 வாரங்களுக்குள் மத்திய அரசு அமைக்க வேண்டும் என்றும் கூறியது.
உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் என்று குறிப்பிடாமல், ஸ்கீம் என்ற வார்த்தையை பயன்படுத்தியது. ஆனால், அதை தமிழக அரசும், மத்திய அரசும் உடனடியாக கேள்வி கேட்காமல், 6 வாரம் முடிந்தபிறகு நீதிமன்றம் சென்றன.
தமிழகம் கொந்தளித்திருக்கிறது இன்று (08/04/2018)
வரை,ஆனால் இன்றுவரை வாடிக்கையாக அதனை மத்தியில் ஆளும் அரசு கொண்டுள்ளன. இதன்மூலம் தமிழ்நாட்டின் விவசாயிகளுக்கு மறைமுகமாக துரோகம் செய்கின்றன என்பதை அவை
வரை,ஆனால் இன்றுவரை வாடிக்கையாக அதனை மத்தியில் ஆளும் அரசு கொண்டுள்ளன. இதன்மூலம் தமிழ்நாட்டின் விவசாயிகளுக்கு மறைமுகமாக துரோகம் செய்கின்றன என்பதை அவை
உணரவில்லை.
ஆனால், சர்க்காரியா கமிஷன் அமைத்தது 1976 ல் என்பதுதான் உண்மை. அதாவது, 1924 ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தம் புதுப்பிக்கவில்லை என்பதே பொய். 1974 ஆம் ஆண்டு அந்த ஒப்பந்தத்தில் கூறியுள்ளபடி, மறுஆய்வு செய்யப்பட்டது. எனவே, 1924 ஒப்பந்தம் செல்லும் என்று காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பு 2018 ல் தீர்ப்பு அளித்தது.
இதிலும் உண்மை இல்லை. அதாவது, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில்தான், 2007 ஆம் ஆண்டு காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பு வந்தது. அந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா மற்றும் தமிழக அரசுகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டும் பிறகு எப்படி அப்போது காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியும். 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு தற்போது 2018ல் தான் வந்துள்ளது. அதையே மத்திய அரசும்,மாநில அரசும் குழப்பிவிட்டன என்பதுதான் உண்மை.
அதேசமயம், கலைஞருக்கு பிறகு வந்த எம்ஜியாரும், ஜெயலலிதாவும் காவேரி சம்பந்தாமாக பேச்சுவார்த்தைகளை நடத்தவே இல்லை என்பதை யாரும் மறுக்க முடியாது.
காவிரி விஷயத்தில் இதுவரை நடந்த வரலாற்றை யாரும் மறைத்துவிட முடியாது. முன்பைவிட இப்போது காவிரி தொடர்பாக ஏராளமான விவரங்கள் ஆதாரபூர்வமாக வெளியாகத் தொடங்கியிருப்பது உண்மையை உணர உதவியாக இருக்கிறது.
இனியாவது, தமிழர்களாய் இணைய முயற்சிப்போம்.
இனியாவது, தமிழர்களாய் இணைய முயற்சிப்போம்.
முடிவுரை:
இப்படி மன்னர்கள் ஆண்டப் போதும்,கிழக்கிந்திய
கம்பெனி ஆண்டப் போதும் மாண்டத் தாத எம் தாய் மத்தியில் சுதந்திர
இந்தியாவின் 70 ஆண்டுகளாக ஆட்சியும்,மாநிலத்தில் 50 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆட்சியும் எம் தாயை தாரை வார்த்தது
கம்பெனி ஆண்டப் போதும் மாண்டத் தாத எம் தாய் மத்தியில் சுதந்திர
இந்தியாவின் 70 ஆண்டுகளாக ஆட்சியும்,மாநிலத்தில் 50 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆட்சியும் எம் தாயை தாரை வார்த்தது
முன்பு ஒரு தமிழ் கவிஞர் - காவேரியை கடக்க இனி ஓடங்கள் தேவையில்லை ஒட்டகங்கள் போதும் - என்று சொன்னது போல தமிழகத்தில் காவேரி பாய்ந்த கழனிகள் எல்லாம் வறண்ட பாலைவனங்களாக மாற துரோகங்கள்
காவேரி எம் தாய்..!
காவேரி எம் மண்...!!
காவேரி எம் குலம்...!!!
காவேரி என் பாராம்பரியம்.!
காவேரி என் வரலாறு...!!!!!
காவேரி என் மரபு ...!!!!!!
காவேரிக்காகப் போராடும் கோடான கோடிப் போராளிகளில் நானும் ஒருவன்..!
Dai badu unaku veliyeh eliyaa edha enga erundhu attiya potta
ReplyDelete