Posts

Showing posts from April, 2018

காவேரி பற்றி அறிவோம்

                    காவேரி யைப்  பற்றி அறிவோம் முகவரை :            சோழநாட்டில் பிறந்து வளர்ந்து தற்போது பல்லவபுரத்தில் வாழும் சோழ வம்சத்தின் குழந்தையாய் , உழவனின்    மகனாய் , களப் பணியாளனாய் , போராளியாய் எம் தாய் ( காவேரித் தாயை ) காண்போம் இக்கட்டுரையில் ..!             “ உலகம் அழியும் காலம் வந்தாலும் சோழ வளநாட்டைத் தன் குழந்தையாய்        வளர்க்கும் அரும்பணியைக் காவேரித்தாய் நிறுத்திக் கொள்ளமாட்டாள் ”             ~ இளங்கோவடிகள்   என்ற கூற்றைப் போல பல கவிஞர்கள் காவேரியை போற்றிக் கூறியுள்ளனர் காவேரியின் வரலாறும் , தோன்றமும் :                  இந்தியத் தீபகற்பத்தின் தென் பகுதியில் அமைந்துள்ளது . குடகு மாவட்டத்தைச் சேர்ந்த தலைக்காவேரி என்ற இடத்தில் 4400 அடி ( கடலின் நீர்மட்டத்தை விட ) உயரத்...